» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:38:59 AM (IST)

கன்னியாகுமரியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளையை சேர்ந்தவர் புளோரா (வயது 62), ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை. இவருடைய கணவர் இறந்து விட்டதால் தனியாக வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புளோரா தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு சென்றுள்ளார். இதனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் புளோராவின் வீட்டு வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புளோராவுக்கும், கன்னியாகுமரி போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. புளோரா கொடுத்த தகவலின் பேரில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory