» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:31:40 PM (IST)

கன்னியாகுமரி - பனாரஸ் (வாரணாசி) காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காசி என்று அழைக்கப்படும் வாரணாசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பன்னெடுங்கால தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது காசி தமிழ் சங்கமம் என்கிற நிகழ்ச்சி பிரதமர் மோடி முன்னெடுத்தார். இந்த முதல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உரையாற்றிய ரயில்வே அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்.
இவரது அறிவிப்பை தொடர்ந்து காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் புறப்பட்டு சனிக்கிழமை பனாரஸ் போய் சேருகின்றது. மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை பானரஸ்லிருந்து புறப்பட்டு செவ்வாய்கிழமை கன்னியாகுமரி வந்து சேருகின்றன. இந்த ரயில் மதுரை,திருச்சி, செங்கல்பட்டு, சென்னையில் உள்ள பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் சென்னைக்கு செல்ல ஒரு வாராந்திர ரயில் சேவை கூடுதலாக கிடைத்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1990 களில் காசிக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை பலமாக வைக்கப்பட்டு வந்தது. அப்போது ஏதோ காரணங்களுக்காக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போய்விட்டது. கன்னியாகுமரியிலிருந்து காசிக்கு சுமார் 25 வருடங்கள் காலதாமதமாக ரயில் இயக்கப்பட்டதிலும் ஒரு நன்மை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள சுமார் 14 மாவட்டங்கள் வழியாக ரயில் இயங்கி மாநிலத்தின் தலைநகர் வழியாக இந்த ரயில் இயக்கப்பட்டது நமக்கு சிறப்பு ஆகும். இவ்வாறு இயக்கப்படுவதால் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களின் வருவாய் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ரயில் அறிவித்து இயங்கும் போது மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இருவழி பாதை பணிகள் நடந்து வந்தது. இது மட்டுமல்லாமல் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களில் கூடுதல் முனைய வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை இருந்து வந்தது. இந்த காரணத்தால் அப்போது காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாராந்திர ரயில் மட்டுமே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் இயக்க முடிந்தது.
வாரணாசியில் 3-வது காசி தமிழ் சங்கமத்தை உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தற்போது மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை இருவழி பாதை பணிகள் முடிந்து விட்டன. கன்னியாகுமரியில் முனைய வசதிகள் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் புதிய நடைமேடை அமைக்கும் பணிகள் முடிவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் வாரத்துக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வரும் காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கும் படத்தில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு செல்ல ஒரு தினசரி ரயில் சேவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகங்கை வழக்கில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!
செவ்வாய் 1, ஜூலை 2025 7:46:56 PM (IST)

அஜித்குமார் விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
செவ்வாய் 1, ஜூலை 2025 5:03:28 PM (IST)

வெற்றி நிச்சயம் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 1, ஜூலை 2025 4:58:05 PM (IST)

அஜித்குமாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டது யார்? டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 1, ஜூலை 2025 4:02:21 PM (IST)

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: மானாமதுரை டி.எஸ்.பி. சஸ்பெண்ட்!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:43:56 PM (IST)

அஜித்குமாரை பிரம்பால் கொடூரமாக தாக்கும் போலீசார் : அதிர்ச்சி வீடியோ வெளியானது!
செவ்வாய் 1, ஜூலை 2025 3:23:07 PM (IST)
