» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)
சென்னை ஆதம்பாக்கத்தில் நகைக் கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டமிட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை அதிபர் மகன் ஒருவரை கடத்தி கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் திட்டம் தீட்டி சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை மாநகரில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாரும் உளவுப் பிரிவு போலீசாரும் அளித்த தகவலில் பெயரில் நேற்று இரவு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இதன்படி மாதவரம் பகுதியில் பதுங்கி இருந்த தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் முதலில் பிடிபட்டார். இவர் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் பகுதியில் மேலும் 4 பேர் கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப் பட்டனர். அப்போது வேளச்சேரி விஜயநகர் பகுதியில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் தென் சென்னை கிளை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, பரங்கி மலை துணை கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் விரட்டி சென்று பிடித்தனர். அவர்களது பெயர் வினோத், பாலமுருகன் என்பது தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் பெயரில் முருகன், சச்சின் ஆகிய இருவரும் பிடிபட்டனர். இவர்களும் ஆதம்பாக்கத்தில் வேறு ஒரு இடத்தில் வைத்து சிக்கினார்கள். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியில் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்கள் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய போது போலீசில் சிக்கிக் கொண்டனர். நகைக் கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு வேறு ஒருவரின் தூண்டுதலின் பேரில் இவர்கள் 5 பேரும் கூலிப் படையினராக செயல்பட்டு தூத்துக்குடியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தி ருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த 5 பேரின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய விசாரணை தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இதன் முடிவில் நகைக்கடை அதிபர் மகனை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொடுத்த நபர் யார்? என்பது பற்றியும் தெரியவரும். அவரையும் கைது செய்வதற்கு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
