» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் தலைமையகம் முற்றுகை அறிவிப்பு: பாஜக தலைவர்கள் வீடு முன்பு போலீசார் குவிப்பு

திங்கள் 17, மார்ச் 2025 11:43:58 AM (IST)



டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

டாஸ்​மாக் மூலம் ரூ.1000 கோடி முறை​கேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த முறைகேட்டை கண்​டித்து இன்று ஆர்ப்​பாட்​டம் நடத்தப்படும் என தமிழக பாஜக அறிவித்திருந்தது. திமுக​வின் மெகா ஊழலை கண்​டித்து மார்ச் 17-ம் தேதி டாஸ்​மாக் தலைமை அலு​வல​கம் அமைந்​துள்ள சென்னை தாள​முத்து நடராசன் மாளிகையை முற்​றுகை​யிடும் போ​ராட்​டம் நடை​பெறும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை  குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜக தமிழக நிர்வாகிகளின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு காவலர்கள் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை காவலர்கள் தடுத்து வைத்ததாக எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார். ‘இது ஜனநாயகமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் வீடுகளின் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory