» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது

சனி 3, மே 2025 4:37:24 PM (IST)



சீர்காழியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜாக்கி உலக சாதனை புத்தகத்தின் வருடாந்திர சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சீர்காழியில் நடைபெற்றது. இதில் உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 
 
இதில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளையும், பல ஆண்டுகளாக திறமையான மாணவர்களை உருவாக்கி வருவதையும் பாராட்டி இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்மணிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியன் ஐகானிக் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

மேலும் கருத்தாளராகவும் ஆசிரியராகவும் இவரது கற்பித்தல் திறனை பாராட்டி முன்மாதிரி ஆசிரியை என்ற கோல்டு ஸ்டார் விருதும் வழங்கி  சிறப்பிக்கப்பட்டது. விழாவில் உலக சாதனை புத்தக நிறுவனர் ஜேக்கப் ஞான  செல்வன், சிஇஓ எஸ்தர், பிரசிடெண்ட் பிரியா சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இரட்டை விருது பெற்ற ஆசிரியைக்கு பள்ளி  ஆசிரியர்கள், மாணவர்கள்  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory