» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை: சீமான் பேட்டி

சனி 28, ஜூன் 2025 9:37:15 PM (IST)

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்கூறியுள்ளார்.

காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. அவர்கள் முடிவெடுத்து சேர்ந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் அது அவருக்கு பலனை தந்திருக்கும். 

தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது அவருக்கு தேவையற்ற சுமை. இந்தியாவை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் இந்த அணிகளெல்லாம் இருந்திருந்தால், 15 எம்.பி.க்கள், மத்தியில் 2 மந்திரிகள் என இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த இடத்தில் கணிப்பு தவறாக போய்விட்டது என்று நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

SURIYAJun 29, 2025 - 11:48:11 AM | Posted IP 104.2*****

கோமாளி செபாஸ்டியன் ஆமை உளர ஆரம்பிச்சுட்டான். எங்கேயோ காசு வாங்கிட்டு கூவுகிறான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory