» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

செவ்வாய் 1, ஜூலை 2025 10:58:04 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை  யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி வெகு விமர்சையாக நடக்கிறது. இதற்காக எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியிலும், கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி என ரூ.300 கோடி திட்டமதிப்பில் மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து மற்ற பணிகளுடன் ராஜ கோபுர பணிகள், விமான தளத்தில் உள்ள மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் ஆகிய விமான கலசங்களில் தங்க தகடு பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மெகா திட்ட வளாக பணியில் 90 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு முடிவுறும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரம் கீழ்பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் சதுர அடியில் பக்தர்கள் அமரும் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலையில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலையில் வேள்விசாலை வழிபாடு நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று (ஜூலை 1) முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகப் பணி தொடங்கியது. 12 கால யாகபூஜைகள் நடக்கிறது. வருகிற 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் கும்பாபிசேகம் நடைபெற்று சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சன்னதி விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்படுகிறது. பின்னர் புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்க படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory