» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பு விழா : முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

வெள்ளி 11, ஜூலை 2025 10:14:05 AM (IST)



நகைச்சுவை நடிகர் கிங் காங் மகளின் திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்..

தமிழில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் கிங் காங். 80கள் தொடங்கி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் நடித்துள்ளார். ‘போக்கிரி, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ உள்ளிட்ட படங்களில் வடிவேலு உடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் பிரபலம்.

இவர் தனது மகளின் திருமணத்துக்காக கடந்த சில நாட்களாக தமிழின் முன்னணி நடிகர்கள் தொடங்கி துணை நடிகர்கள் வரை பலருக்கும் அழைப்பிதழ் வைத்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற கிங் காங் மகள் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். உடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory