» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)
எனது பேச்சை கேட்காத அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக-வன்னியர் சங்க தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: ஐந்து வயது குழந்தைபோல நான் உள்ளதாக ஒருவர் (அன்புமணி) கூறினார். அந்தக் குழந்தைதான் 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தலைவராக்கியது. தந்தை சொல்மிக்கமந்திரம் இல்லை.
எனவே, என் பேச்சை கேட்கவில்லை என்பதால், அவர் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது. எனது இனிஷியலை வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கும்பகோணத்துக்கு சென்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அன்புமணி சென்றார். ராமதாஸின் முன்னாள் உதவியாளர் நடராஜனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் சென்ற அன்புமணி, நேற்று இரவு தைலாபுரம் ராமதாஸ் வீட்டுக்குச் சென்று, தாயார் சரஸ்வதியை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்திட அமைச்சர் அறிவுறுத்தல்!
வெள்ளி 11, ஜூலை 2025 10:50:26 AM (IST)
