» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:36:45 PM (IST)

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சநாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை இன்று சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று இந்த புகாரை அளித்துள்ளார். மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory