» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)
தூத்துக்குடியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி நிகிலேசன் நகர் காந்தி நகரில் வசிப்பவர் ராஜன் மகன் ரவி (50), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் அவரது தாயார் சரஸ்வதி வசித்து வருகிறார். அதே தெருவில் உள்ள தனது மூத்த மகன் சுரேஷ் பாபு என்பவர் வீட்டுக்கு தனது வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை வீட்டை திறக்க வரும்போது. வீட்டில் உள்ள கதவுகளில் உள்ள பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூபாய் 2லட்சம் ஆகும்.
இதுபோல் நேற்று இரவு அதே தெருவில் மற்றொரு வீட்டிலும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் மாரியப்பன் மனைவி பகவதி (62), என்பவர் வசித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி சிவகாசியில் உள்ள தனது மூத்த மகள் வீட்டில் நடந்த சுப நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இந்த நகையின் மதிப்பு ரூ.26 லட்சம் ஆகும்.
இந்த இரு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் ரூரல் டிஎஸ்பி சுதீர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நகைகள் கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:23:17 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு துரோகம் செய்யும் திமுக தப்பிக்கவே முடியாது: அன்புமணி காட்டம்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:57:04 PM (IST)

சாமிதோப்பு அய்யா கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:32:12 PM (IST)

நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்: ஆட்சியர் வழங்கினார்.
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:27:03 PM (IST)

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)
