» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர்: தமிழக முதல்வருக்கு சத்யராஜ் நன்றி!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:55:14 PM (IST)
கோவை உயர்மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை வைத்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த மேம்பால கட்டுமானம் ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மேம்பாலத்தை திறந்து வைத்தார்.இந்நிலையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், "இப்போது நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். சொந்த ஊரில் இருப்பது பெரிய விஷயமா? என்று கேட்பீர்கள். நான் ஒரு படப்பிடிப்பிற்காக கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறேன். அந்தப் படத்தின் பெயர் ஜி.டி நாயுடு. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த மாதிரி ஜி.டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்கிறோம். இதில் ஜி.டி நாயுடுவாக என்னுடைய அன்பு நண்பர் மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணா இயக்குகிறார். வர்கீஸ் தயாரிக்கிறார்.
நான் ராமையா பிள்ளை என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது கோயம்புத்தூரில் ஜி.டி நாயுடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிற இதே நேரத்தில் ஒரு மிகப்பெரிய மேம்பாலத்திற்கு நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஜி.டி நாயுடு அவர்களின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார். ஒரு கோயம்புத்தூர்க்காரன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன். எங்கள் படக்குழுவின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜி.டி நாயுடு குடும்பத்தாருக்கும் எங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பேசியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)

கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)

புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:59:09 AM (IST)

பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை: எ.வ.வேலு
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:45:33 AM (IST)

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)

கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா தொடங்கியது: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:24:50 AM (IST)




