» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்துத் தகராறில் ஒருவர் குத்திக் கொலை: 4பேர் கைது!

திங்கள் 13, அக்டோபர் 2025 8:01:57 AM (IST)

பழையகாயல் அருகே முன்விரோதத்தில் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் அருகே தெற்கு கோவங்காடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (49), பழையகாயலில் உள்ள தனியார் குடியிருப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வளர்மதி, தூத்துக்குடியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். 

செல்வகுமாருக்கும் அவரது அண்ணன் விஜயகுமார் குடும்பத்துக்குமிடையே சொத்துத் தகராறு இருந்ததாம். ஓராண்டுக்கு முன்பு செல்வகுமாரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை விஜயகுமாரின் மகன்கள் சேதப்படுத்தியதால், அவர் ஆத்திரமடைந்து விஜயகுமாரின் மனைவி விஜயலட்சுமியை அரிவாளால் வெட்டினாராம். அதனால், முன்விரோதம் மேலும் வளர்ந்ததால், செல்வகுமார் தனது குடும்பத்தினருடன் பழையகாய­லில் குடியேறினார்.

இதனிடையே, அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கோவங்காட்டில் குடியேறியதுடன், அங்கிருந்து வேலைக்குச் சென்றுவந்தார். நேற்று முன்தினம் அவர் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பியபோது, பழையகாய­ல்-கோவங்காடு விலக்கில் ஒரு கும்பல் வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாம்.  இதில், காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து  டிஎஸ்பிக்கள் மகேஷ்குமார் (திருச்செந்தூர்), நிரேஸ் (ஸ்ரீவைகுண்டம்), ஆத்தூர் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், செல்வகுமார் கொலை தொடர்பாக தூத்துக்குடி தெற்கு கோவங்காடு தெற்கு தெரு விஜய குமார் மகன் ராஜேஷ் குமார் 25, சேர்வைகரன் மேடம், சிவஞான புரம் மகன் பாலா முகேஷ் 21, சிவகங்கா புரம் மாஷானா முத்து மகன் பாலா விக்னேஷ் 19,  தங்கம்மாள் புரம் வீரமணி மகன் சபரிவாசன் 20 ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory