» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

சனி 18, அக்டோபர் 2025 8:53:28 AM (IST)

தொடர்மழையின் காரணமாக கோரம்பள்ளம் வடிநிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடை நீர்வழிப் பகுதியில் பெய்து  வரும் தொடர்மழையின் காரணமாக கோரம்பள்ளம் குளத்திற்கு காலை 5.45 மணி அளவில்,  1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  கோரம்பள்ளம் குளத்தின் பாதுகாப்பான  நீர்மட்டத்தை பராமரிக்கும் பொருட்டு 1500 கன அடி தண்ணீர் குளத்தில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. 

கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மழை நிலவரம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வெள்ள நீர் கட்டுப்பாடு செய்யப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory