» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை!

செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:14:08 PM (IST)

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.600 கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது. 

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.120 கோடி முதல் ரூ.130 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. வார இறுதி நாட்களில் அது ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடியாக அதிகரிக்கிறது. 

பண்டிகை காலங்களில் மது விற்பனை மேலும் 15 சதவீதம் உயருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

அதாவது, கடந்த 18-ம் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ம் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும், நேற்று (தீபாவளி) ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.

மண்டலம் வாரியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.158 கோடியே 25 லட்சத்திற்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.157 கோடியே 31 லட்சத்திற்கும், சேலம் மண்டலத்தில் ரூ.153 கோடியே 34 லட்சத்திற்கும், மதுரை மண்டலத்தில் ரூ.170 கோடியே 64 லட்சத்திற்கும், கோவை மண்டலத்தில் ரூ.150 கோடியே 31 லட்சத்திற்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory