» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் (ராமநாதபுரம்) 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு - வடமேற்காக நகரக்கூடும் என்றும், வட தமிழகம் - தெற்கு ஆந்திர கடலோரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 20.4 செ.மீ. வரை மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory