» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்புமிக்க மரம் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:06:56 PM (IST)

பனைமரம் நமது மாநிலத்திற்கு உரிய சிறப்பு மிக்க மரம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 
 தமிழ்நாடு வனத்துறை, தூத்துக்குடி சரகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் 50,000 பனை விதைகள் நடும் விழாவின் துவக்கமாக இன்று (31.10.2025), தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பனை மரவிதை நட்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்ததாவது :- பனைமரங்கள். பனை விதைகள் நடும் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருகை தந்திருக்க கூடிய அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நிகழ்வில் உற்சாகமாக பங்கு எடுத்திருக்கக் கூடிய நமது மாணவச் செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், பனைமரம், அதனுடைய சிறப்புகள், அது எத்தனை ஆண்டுகள் வாழும், எவ்வளவு நல்லப் பழங்கள் எல்லாம் தரும்? என்ற விவரம் மாவட்ட வன அலுவலர் எடுத்துரைப்பார்கள். 
 பனைமரம் நமது மாநிலத்தினுடைய மாநில மரம் என்று அறிவித்திருக்கிறார்கள். பனை மரங்களை அதிகமாக நமது மாநிலத்தில் மட்டும்தான் பார்க்க முடியுமே தவிர, வேறு மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் எல்லாம் பனைமரம் என்கிற ஒரு மரமே இருக்காது. அந்த அளவிற்கு பனைமரம் நமது மாநிலத்திற்கு மட்டுமே ஒரு சிறப்புமிக்க ஒரு மரம். அது எவ்வளவு வறட்சியாக இருந்தாலும் வளர்ந்து விடும். அதிலிருந்து கிடைக்கக்கூடிய பலன்கள், பொருட்கள் எல்லாவற்றையும் நாம் தினந்தோறும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
 நாங்கள் எல்லாம் பனை மரத்தில் இருக்கக்கூடிய பொருட்களை எடுத்துத்தான் விளையாட்டுப் பொருட்கள், காற்றாடி மற்றும் எல்லா விதமான பொருட்களையும் அதிலிருந்து தான் செய்தோம். பனைமரங்களிலிருந்து வரக்கூடிய அந்த கருக்கை எடுத்து, கார்த்திகை தீபத்தின் போது பயன்படுத்துவோம். நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இலட்சகணக்கான பனைமரங்கள் உள்ளன. 
 அதிலிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்கள் நாம் தினந்தோறும் சாப்பிடக்கூடிய ஒன்றாகும். மேலும், பல்வேறு உடல் ரீதியிலான நல்ல பலன்களையும் தரக்கூடியது. எனவே, மாநில மரம் என்று போற்றத்தக்க, இந்த பனை மரத்தை உங்களது பள்ளியில் நீங்கள் எல்லாம் வளர்ப்பதற்கு முன்முயற்சி எடுத்து, ஏறக்குறை 200-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டு, அதனை வளர்ப்பதற்கு நீங்கள் ஏற்பாடு செய்து இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி, சிறப்பாக பாராமரிக்கப்பட்ட சுற்றுச்சுவர் வசதிகளுடன் இருக்க கூடிய பள்ளி என்ற பள்ளிக்கூடம் இது. இந்த வல்லநாடு பகுதியில் வனத்துறை சார்பாக அதிக மரங்களை வளர்ப்பது மற்றும் சுற்றுசூழல் கல்வி மையமாக (Eco Education Centre) செயல்படுத்தப்படுகிறது. வெளிமான் சரணாலயத்தின் கல்வி மையத்தினை இங்கு நிறுவியிருக்கிறார்கள். இதுபோன்று பல்வேறு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். 
 இந்த பள்ளிக்கூடத்தை ஒரு பசுமை நிறைந்த பள்ளிக்கூடமாக மாற்றுவதற்கு அனைத்து மாணவர்களும், பல்வேறு முயற்சிகளை எடுத்து, ஒத்துழைப்பை நல்க வேண்டும். ஈக்கோ கிளப் என்று குறிப்பிடுகின்ற கிளப்ல இருக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது நட்டு வளர்த்து, அதனை முற்றிலும் வளரும் நிலையளவுக்கு வளர்த்து அதனை பராமரிக்க வேண்டும். நீங்கள் எல்லாம் இந்த நாளில் மரம் நடும் அற்புதமான பணியைச் செய்வதற்காக உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 மாணவர்களாகிய நீங்கள் எல்லாரும் மென்மேலும் பனை மரத்தைப் பற்றிய விவரங்களை எல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
 இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) சிதம்பரநாதன், மாவட்ட கல்வி அலுவலர், வனத்துறை சார்ந்தவர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டாத ஆசிரியர்கள் : பள்ளி செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:44:27 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

தூத்துக்குடி சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனையில் திருமண்டல மேலாளர் தேவா காபிரியேல் ஆய்வு
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:11:26 PM (IST)

பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:06:57 PM (IST)

பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:50:13 PM (IST)




