» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!

வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க 8வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதேவேளை, கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பேச்சுப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பேச்சுப்பாறையில் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால், திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 7 நாட்களாக அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அருவிக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளதால் திற்பரப்பு அருவில் குளிக்க 8வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேவேளை, பேச்சுப்பாறை அணையில் நீர் வெளியேற்றம் நாளை நிறுத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் நாளை முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory