» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சியில், ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இன்று (01.11.2025) நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சினை வாக்குசாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி பயிற்சி வழங்கினார்.
இந்திய தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 04.11.2025 முதல் 04.12.2025 வரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்படவுள்ளது.
மேலும் வாக்காளர் பதிவு அலுவலர் அவர்களின் கண்காணிப்பில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று, தற்போதைய வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்களை வழங்க வேண்டும். வாக்காளர் அல்லது அவர்களின் உறவினரின் பெயரை கடைசி சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள பெயருடன் இணைத்து சரிபார்க்க வேண்டும். கணக்கெடுப்பின் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோருபவர்களுக்கு படிவம் 6 மற்றும் அதற்கான உறுதிமொழி படிவத்தினை வழங்க வேண்டும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்ப உதவ வேண்டும். மேலும் அப்படிவத்தினைச் சேகரித்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் வீட்டிற்கும் குறைந்தது மூன்று முறை சென்று விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விண்ணப்ப படிவத்தில் வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி – (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்), வரிசை எண், பகுதி எண் மற்றும் பெயர், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் தொகுதி பெயர், மாநிலம் (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்), பழைய புகைப்படம் (முன்பே அச்சிடப்பட்டிருக்கும்). QR குறியீடும் இவற்றினை சரிபார்த்து, தற்போதைய புகைப்படத்தை வாக்காளர்களால் ஒட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சி முகாமில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கண்ணகி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் கபடி மைதானம்: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு!
சனி 1, நவம்பர் 2025 5:25:31 PM (IST)

தமிழகத்தில் ஆளுநர் ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் பிரச்சினை இல்லை: துரை வைகோ
சனி 1, நவம்பர் 2025 4:56:34 PM (IST)

விடுப்பட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு முழு நடவடிக்கை எடுப்போம்: ஆட்சியர் உறுதி!
சனி 1, நவம்பர் 2025 4:06:26 PM (IST)

தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 65ஆக தளர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு!!
சனி 1, நவம்பர் 2025 3:47:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

இ.பி.எஸ். எப்படி முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்: செங்கோட்டையன்
சனி 1, நவம்பர் 2025 12:34:15 PM (IST)




