» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் 6 புதிய மகளிர் விடியல் பயண பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:01:52 AM (IST)

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 6 புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகளை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 6 புதிய மகளிர் விடியல் பேருந்துகள் துவக்க விழா இன்று காலை நடந்தது. விழாவிற்கு போக்குவரத்து கழக பொது மேலாளர் ஏ.ஆர். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கோட்டமேலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். புதிய பேருந்துகளை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர்கள் ஜேக்கப். ரமேஷ் பாபு . போக்குவரத்து கழகதொழிற்சங்க பொதுச் செயலாளர் தர்மன் பொருளாளர் முருகன் நிர்வாகிகள் கருப்பசாமி மகாவிஷ்ணு லிங்கசாமி மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
புதிய பேருந்துகள் & வழித்தட விபரம்
TN72N 2675 தூத்துக்குடி - சுப்பிரமணியபுரம் (வழி கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கட்டாலம்பட்டி, சேர்வைக்காரன்மடம், சாயர்புரம்)
TN72N 2684 தூத்துக்குடி - கீழவைப்பார் (வழி அமெரிக்கன் மருத்துவமனை, தாமஸ்புரம், தருவைகுளம், பட்டிணமருதூர், வேப்பலோடை, கடலூர்)
TN72N 2656 தூத்துக்குடி - பெருங்குளம் (வழி கோரம்பள்ளம், புதுக்கோட்டை, கட்டாலம்பட்டி, செய்துதையார்புரம், சாயர்புரம், நட்டாத்தி
TN72N 2670 கோவில்பட்டி - வெள்ளாளங்கோரி (வழி நாலாம்பட்டிபுதூர், வாமாரமடகி, கட்டாரம்குளம், செட்டிகுறிச்சி, கோனேர்கோட்டை)
TN72N 2692 கோவில்பட்டி - கீழரால் (வழி திட்டக்குளம், கொடுக்கும்பாறை, கசவன்குன்று, செம்மடூர், டி.சண்முகாபுரம், வலம்பட்டி)
TN72N 2688 கோவில்பட்டி - வேடபட்டி (வழி விங்கம்பட்டி, கடலையூர், மலைப்பட்டி, தாப்பாத்தி, வடமலாபுரம், அசேர்குளம்)
TN72N 2716 கோவில்பட்டி - அகிலாண்டபுரம் (வழி தானாகண்டபுரம், இளமச்சாவல், வில்லக்குசேரி, சிவஞானபுரம், சவலாப்பேரி, கரிசல்குளம்)
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு
வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
வியாழன் 4, டிசம்பர் 2025 10:27:42 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் முற்றுகை!
புதன் 3, டிசம்பர் 2025 8:09:21 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2பேர் கைது : 18½ பவுன் நகைகள் பறிமுதல்!!
புதன் 3, டிசம்பர் 2025 4:51:24 PM (IST)

நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை: திமுக அரசை சாடிய விஜய்!
புதன் 3, டிசம்பர் 2025 4:41:21 PM (IST)


