» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)



தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். 

தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் என்ற திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய வணிக வளாகத்தில் விற்பனை அங்காடிகளை அமைக்கும் திட்டத்தினை நபார்டு வங்கியின் உதவி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் முன்னிலையில், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனை அங்காடிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மூத்த பொது மேலாளர் ஆர். ஆனந்த் பேசுகையில் "பெண்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகநபார்டு வங்கி மூலமாக தமிழகத்தில் சுய உதவி குழு பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் மூலமாக 12,000 க்கு மேற்பட்ட சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஸ்டார்ட் அப் திட்டத்தில் அதிகமானோர் தொழில் தொடங்கியுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதற்காகமத்திய, மாநில அரசு வணிக இணைய தளத்தில் அவர்களை இணைத்துள்ளோம்.

மேலும் எங்கே எந்த கண்காட்சி நடந்தாலும் நபார்டு விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது மக்கள் கூடும் இடங்களில் ஸ்டால் இன் மால் என திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளும் தயாரிக்கப்படும் உற்பத்தி பருக்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுப்பது மூலமாக அந்த பொருட்களின் மதிப்பு உயர்கிறது அதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory