» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிச.29ல் இ.எஸ்.ஐ.சி., வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் கூட்டம்!
சனி 27, டிசம்பர் 2025 8:44:30 AM (IST)
இ.எஸ்.ஐ.சி., வருங்கால வைப்புநிதி தொடர்பாக தூத்துக்குடி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (டிச.29) நடக்கிறது.
இ.எஸ்.ஐ.சி. சார்பில் ‘சுவிதா சமகம்’ மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் ‘‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற பெயரில் கூட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு 4 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் சர்.சி.வி.ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியிலும், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அவ்வை பண்ணை சந்து பகுதியில் உள்ள எக்செல் சென்ட்ரல் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இதில் இ.எஸ்.ஐ.சி. காப்பீட்டாளர்கள் மற்றும் பயனாளர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் உள்பட அனைவரும் கலந்துகொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை நெல்லை இ.எஸ்.ஐ.சி. துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் பாஸ்கர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்கழியில் மக்களிசை: பறை இசைத்து கனிமொழி எம்.பி., துவக்கி வைத்தார்!
சனி 27, டிசம்பர் 2025 10:58:05 AM (IST)

7-வது மாநில நிதிக்குழு மானிய விவரங்கள் பதிவேற்றம்: நிதிக்குழு தலைவர் மு.அலாவுதீன் ஆய்வு
சனி 27, டிசம்பர் 2025 10:40:07 AM (IST)

இரட்டை பசுமாடு சின்னம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் : தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
சனி 27, டிசம்பர் 2025 10:14:28 AM (IST)

வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை: கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் உயர்வு
சனி 27, டிசம்பர் 2025 10:08:56 AM (IST)

வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு!
சனி 27, டிசம்பர் 2025 8:26:28 AM (IST)

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை: சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் நீதிபதிகள் கருத்து
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:56:12 PM (IST)

