» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!

வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)



தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது.

இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘அமெரிக்காவின் தடைகளை மீறியதற்காக பெல்லா 1 என்ற வர்த்தகக் கப்பலையும், கரீபியன் கடலில் சோபியா என்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory