» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையம் கட்ட எதிர்ப்பு: ஜமாத்தார்கள் திரண்டதால் பரபரப்பு

வெள்ளி 9, ஜனவரி 2026 11:40:35 AM (IST)


செய்துங்கநல்லூரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பஸ் நிலையத்தினை கட்ட முயற்சிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்துங்கநல்லூரில் ரயில் நிலையம் அருகில்ஒட்டபிடாரம் தொகுதிக்கு உள்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தஇடத்தில் தொகுதி எம்.எல்.ஏ சண்முகையா அவர்கள் உள்ளூர்வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் கட்ட8 லட்சம் பணம் ஒதுக்கீடு செய்ப்பட்டது. இதற்கிடையில்அடிக்கல் நாட்டும் போது அங்கிருந்துமற்றொரு இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து எம்.எல்.எ செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மற்றும் குடியிருப்பு மக்கள் பயன்பெறும் வகையில்புதிய பள்ளிவாசல் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுஆயத்த பணி துவங்கியது. அதன் பின் அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்புஅந்த இடத்தினை விட்டு விட்டு காட்டுப்பகுதியில் பஸ் நிலையம் கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

அதிகாரிகளிடம் கேட்டபோது முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆகவே நாங்கள் இவ்விடத்தில் பணி செய்கிறோம் என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமாத்தார், நாங்கள் தானே கோரிக்கை வைத்து பஸ் நிறுத்தம் கேட்டோம், நாங்களே எப்படி எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறி எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என ஆணையாளரிடம் கடிதம் கொடுத்தனர்.ஆனாலும் அதிகாரிகள் கேட்கவில்லை. 

இதனால் ஜமாத்தை சேர்ந்தவர்கள் சண்முகையா எம்.எல்.ஏவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். எங்களுக்கு பள்ளிவாசல் முன்புத்தான் பஸ் நிலையம் கட்டவேண்டும் என்று கூறினர். அவர்கள் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியருக்கு மனு அனுப்பினர். இவர்களுக்கு உதவியாக வியாபாரி சங்கத்தினை சேர்ந்தவர்கள், ஊர் பொதுமக்கள் குரல் எழுப்பினர். ஆயினும் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர்காட்டுக்குள்தான் எங்களுக்கு ஆட்சியர் அனுமதி கொடுத்துள்ளார். அங்குதான் கட்டுவோம் என்று கூறினர்.

இதனால் இன்று காலையில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் நேற்று இரவு செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார், ஜமாத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது மக்கள் தேவைக்குத்தான் அரசு பணம். ஆகவே எங்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி வாசல் அருகில் பஸ் நிலையத்தினை கட்டுங்கள். எம்.எல்-.எ ஒதுக்கீட்டில் தான் இந்த பணி நடக்கிறது. எம்.எல்.ஏ இரண்டு முறை சொல்லியும் திட்டமிட்டு மக்கள் பயன்பாடு இல்லாத இடத்துக்கு பஸ் நிலையத்தினைகட்ட முயற்சி செய்கிறார்கள். இதனால் அரசு பணம் 8 லட்சம் வீணாகி போய்விடும். திட்ட மிட்டு அரசின் பெயரை கெடுக்க இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறார்கள் . எனவே உடனே இந்த பணியை நிறுத்திபள்ளி வாசல் அருகில் பஸ் நிலையத்தினை கட்ட வேண்டும் என்று கூறினர்.

அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய இன்ஸ்பெக்டர், தற்காலிகமாக இந்தபணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அனுமதி வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை போராட்டத்தனை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜமாத்தை சேர்ந்தவர்கள் அதற்கு சரி என ஒப்புக்கொண்டு பேராட்டத்தினை ஒத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் அப்துல் காதர், செயலாளர் பாசில் சமீர், தோணி அப்துல்காதர், நாவாஸ் , உபைஸ், வக்கீல் கோதர், இம்ரான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில் இன்று காலையில் ஜமாத்தினர்பஸ் நிலையம் கட்டவேண்டிய பள்ளிவாசல் இடத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஜமாத் செயலாளர் பாசில் சமீர் கூறும் போது, செய்துங்கநல்லூர், வி.கோவில் பத்து, விட்டிலாபுரம் பஞ்சாயத்து ஆகிய மூன்று இணைந்து கூடும் இடம் செய்துங்கநல்லூர் புதிய பள்ளிவாசல். இவ்விடத்தில் தான் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. சுந்தர் நகர் , ஏ.வி.ஏ நகர் உள்பட பல புதிய நகர்கள் இந்த இடத்தில் தான் உருவாகி வருகிறது. 

இந்த இடத்தில் சாலை அகலபடுத்தும் முன்பு பஸ் நிறுத்தம் இருந்தது. ஆகவே தான்பள்ளிவாசல்முன்பு பேருந்து நிலையம் வேண்டும் எனஇப்தார் நோன்புக்கு வருகை தந்த சண்முகையா எம்.எல்.ஏ விடம்கோரிக்கை வைத்தோம். அதற்காக 8 லட்சம் ஒதுக்கீடு செய்தார்கள்.ஆனால் அவர் கொடுத்த தொகையை மற்றொரு இடத்தில் கட்ட முயற்சி செய்து வருகிறார்கள். ஆகவே நாங்கள் சாலை மறியல் செய்வதாக அறிவித்தோம். 

காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு ஆவண செய்வதாக கூறியுள்ளார்கள். இதையும் மீறி அவர்கள் பஸ் நிலையத்தினை பள்ளிவாசல் அருகில் கட்டவில்லை என்றால் மீண்டும் தொடர் போராட்டத்தில ஈடுபடுவோம். அரசுவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்யும்அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். தற்போது இந்த போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும், செய்துங்நல்லூர், வி.கோவில்பத்து, விட்டிலாபுரம் பொதுமக்களும் கைகோர்த்து உள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory