» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!

சனி 17, ஜனவரி 2026 11:56:02 AM (IST)


திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்து வருவதாக பொங்கல் விழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடியில், தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 16வது வார்டு தபால் தந்தி காலனியில், மக்கள் நல மன்றம் ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசுகள் வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவாழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில்  எல்லாத் துறைகளிலுமே தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை மத்திய பாஜக அரசு பாராட்டியுள்ளது. தூத்துக்குடி மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய தாா்சாலைகள், கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. திமுக ஆட்சியை குறைசொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory