» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீசார் - கம்யூனிஸ்ட்டுகள் இடையே வாக்குவாதம்: ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

திங்கள் 19, ஜனவரி 2026 12:30:40 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். ஆட்சியர் அலுவலக வாயில் அருகே நின்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வாகனம், போக்குவரத்தில் சிக்கியது.

இதனால், ஆத்திரமடைந்த போலீசார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை நிற்க விடாமலும், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க அனுமதி மறுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஏற்பட்டதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றனர். மனு அளித்த பிறகு மாற்று இடத்தில் பத்திரிகையாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேட்டியளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory