» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தீவிர கண்காணிப்பு: திமுக செயற்குழுவில் தீர்மானம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 7:59:41 AM (IST)

பிப்ரவரி 22-ஆம் தேதி தூத்துக்குடியிலும், 24-ஆம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்துவது என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஜீ.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, என். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
இக்கூட்டத்தில், மார்ச் 1-ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்பாகக் கொண்டாடுவது. பிப்ரவரி 22-ஆம் தேதி தூத்துக்குடியிலும், பிப்ரவரி 24-ஆம் தேதி கோவில்பட்டியிலும் நடைபெற உள்ள "தமிழ்நாடு தலைகுனியாது" தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்துவது
பிப்ரவரி 21-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தென்மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் பெருமளவில் கலந்துகொள்வது. பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபடாத வகையில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் சுசி ரவீந்திரன், மாநிலப் பொறியாளர் அணித் துணைச் செயலாளர் அன்பழகன், மாநில மீனவரணித் துணைச் செயலாளர் துறைமுகம் பிளாரன்ஸ், மாநில நெசவாளரணித் துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:53:00 PM (IST)

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:18:36 PM (IST)

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

