» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 11:03:17 AM (IST)

சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்
- உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
- மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.28,687 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- நதிக்கரை மேம்பாட்டிற்காக ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 40 புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் அமைக்க ரூ.291 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக் குடிநீர் திட்டங்களை புதுப்பிக்க ரூ.809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டிற்கு பதக்கம் பெற்றுத் தந்த 5403 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.176 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
- 5 ஆண்டுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மூலம் ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- 1.14 லட்சம் வீடுகள் ரூ.969 கோடி செலவில் பழுது பார்க்கப்பட்டுள்ளன.
- கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 20,484 கி.மீ. சாலைகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செயல்பட்டு வருகிறது.
- 5 ஆண்டுகளில் 38 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,397 கோடியில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுகின்றன.
- தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- கொரோனா பெருந்தொற்றை தி.மு.க. அரசு பேராற்றலுடன் சமாளித்தது.
- காவிரி, வைகை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு பூங்காக்கள் அமைக்க ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர்.
- முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தில் இதுவரை 6,374 கோடி ரூபாய் மக்களுக்கு செலவிடப்பட்டுள்ளது.
- புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
- இதுவரை 79.17 லட்சம் பேருக்கு செய்யப்பட்டசோதனையில் 1,929 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- 36 லட்சத்திற்கு அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
- 12.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- 11.19 சதவீதம் என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
- பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை உதவித்தொகை தரப்படுகிறது.
- திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:53:00 PM (IST)

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:18:36 PM (IST)

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

