» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:51:36 PM (IST)

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் புகார்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு, திமுக அரசின் வீழ்ச்சிக்கான தொடக்கம் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களில் 10% வரை லஞ்சம் பெற்று, சுமார் ரூ.1,020 கோடி ஊழல் புரிந்த புகாரில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நீதியின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், அரசு வேலைகளை விற்பனை செய்து ரூ.888 கோடி ஊழல் புரிந்ததாக அமைச்சர் நேரு மீது எழுந்துள்ள மற்றொரு புகார் மீதும், கூடிய விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உண்மை வெளிக்கொணரப்படும் என்ற நம்பிக்கையை இந்த நீதிமன்ற உத்தரவு ஏற்படுத்தியுள்ளது."

"மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சி, கமிஷன் பெற்று ஊழலில் திளைக்கும் #ALLFAIL திமுக அரசின் ஊழல் கோட்டை சுக்குநூறாக இடியும் நாளுக்கான 'கவுண்ட்டவுன்' (Countdown) இன்றோடு தொடங்கிவிட்டது.

கூடிய விரைவில் திமுகவினரின் ஒட்டுமொத்த ஊழலும் நீதிமன்றத்தால் அம்பலப்படுத்தப்படும். தமிழக மக்களால் அவர்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை," என்று அவர் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory