» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நான் என்ன தவறு செய்தேன்? அரசியலை விட்டு விலகத் தயார்! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்
புதன் 25, பிப்ரவரி 2026 10:18:51 AM (IST)
அதிமுக ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகியும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தன்னை அரசியலில் தனிமைப்படுத்துவதாகக் கூறி போடியில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, போடியில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஓ.பி.எஸ், செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்:"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு முதலமைச்சர் ஆகும் விருப்பமே இல்லை. என்னை வற்புறுத்தித்தான் அந்தப் பதவியில் அமர வைத்தார்கள். ஆனால், அதன் பிறகு பல்வேறு வழிகளில் என்னை அவமானப்படுத்தி பதவியிலிருந்து வெளியேற்றினார்கள். நான் திமுக-வுக்கு வாழ்த்து தெரிவித்ததை வைத்து, அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத் தவறான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள். நாகரிகம் கருதியே நான் வாழ்த்து சொன்னேன்."
டிடிவி தினகரன் தன்னை 'பசுந்தோல் போர்த்திய புலி' என்று விமர்சித்தது குறித்துப் பேசிய அவர்: "அரசியல் நாகரிகம் கருதி நான் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. நான் நினைத்தால் அவரை விட மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த முடியும். அரசியலில் என்னை இந்த அளவுக்குத் தனிமைப்படுத்தும் வகையில் நான் என்ன தவறு செய்தேன்? அந்த உண்மையைச் சொன்னால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். நான் என்ன இப்போது சங்கர மடத்துக்கா செல்ல முடியும்?" என விரக்தியுடன் கேள்வி எழுப்பினார்.
"திமுக பலமான கூட்டணியை அமைத்துள்ளது. அவர்களை வீழ்த்த வேண்டுமானால் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு." வரும் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிடுவேனா என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனால், நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன்." எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவில் வகுத்த சட்ட விதிமுறைகளை மீண்டும் கொண்டு வரும் வரை, கட்சி விதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவேன்." இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

