» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் தவித்து வரும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார்.
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அங்கு தவித்து வரும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: "ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, அங்கு வேலை செய்து வரும் இந்தியர்கள், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்களின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது."
மத்திய அரசு உடனடியாக அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அங்குள்ள மீனவர்களின் நிலை குறித்துத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுடன், அவசர கால உதவி மற்றும் தொடர்பு மையங்களை (Help Desks) அமைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடு: மேலும், போர் பதற்றம் நிலவும் பகுதிகளில் இருந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் மீனவர்களை, சிறப்பு ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரின் உறுதி: இந்தக் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுகவின் மிரட்டலால் ரஜினி பின்வாங்கினார்; ஆனால் விஜய் அஞ்சமாட்டார்! - ஆதவ் அர்ஜுனா
வியாழன் 12, மார்ச் 2026 5:45:26 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!
வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம்: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
வியாழன் 12, மார்ச் 2026 4:26:04 PM (IST)

ஜன நாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? – ரூ. 120 கோடியைத் திரும்பக் கேட்கும் முன்னணி நிறுவனம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:19:27 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)

