» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க ஆதரவுடன் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி
புதன் 1, ஏப்ரல் 2026 12:05:18 PM (IST)
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் த.வெ.க ஆதரவுடன் கூட்டணி அமைப்போம் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியக் குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அத்வாலே, சென்னையில் செய்தியாளர்களை ச்நதித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தலை அறிவித்துள்ளது. தற்போது புதுச்சேரி மற்றும் அசாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அதேபோல், இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடிக்கும். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால், அங்கும் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் இந்த முறை திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், த.வெ.க தலைவர் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவரது ஆதரவைப் பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்."
நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் இந்தியக் குடியரசு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெறக் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம். பிரதமர் மோடி 3-வது முறையாகப் பதவியேற்று நாட்டின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!
புதன் 1, ஏப்ரல் 2026 10:28:37 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
புதன் 1, ஏப்ரல் 2026 10:21:56 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

