» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனக் கட்டண முறைக்கேடை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. 

புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களுக்கான 100 ரூபாய் விரைவு தரிசனக்  கட்டணச் சீட்டு வழங்கும் நடைமுறையில், சுமார் 25 லட்சம் ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்ததோடு பின்வரும் முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 100 ரூபாய் விரைவு தரிசனத்தில் 25 லட்சம் ரூபாய் அளவிற்கு இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கும் போது, அதனை ஆலை மற்றும் கோவில் உயர் அதிகாரிகள் கண்காணித்துத் தடுக்கத் தவறியது ஏன்?

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கோவிலுக்கு நாள்தோறும் சராசரியாக எத்தனை பக்தர்கள் வருகை தருகின்றனர் என்ற துல்லியமான விபரத்தைக் கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைக்கேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory