» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)
தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் மகள் மதுமிதா (21) என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது அஜித் குமார் என்ற 54 நாட்களேயான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக மதுமிதா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு, அதற்காகத் தொடர் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மதுமிதா, நேற்று காலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, சீலிங் ஃபேனில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. .
இது குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மதுமிதாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மதுமிதாவிற்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால், சட்ட நடைமுறைகளின்படி தூத்துக்குடி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

மோசடிப் பேர்வழிகளுக்கு ஆதரவா? சி. மகேந்திரன் தவெக-வில் இணைந்ததால் சிபிஐ பரபரப்பு அறிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 4:44:00 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

மேகேதாட்டு அணை விவகாரம் : சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:26:14 AM (IST)


