» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர் அஸ்வனி குமார்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 10:28:08 AM (IST)

ஐபிஎல் 12வது லீக் போட்டியில்  கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபாரமாக வென்றது.
 ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடியது.
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். கேகேஆர் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. நரைன் 0 ரன்களிலும், டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
 அதன் பின், கேப்டன் அஜிங்க்யா ரஹானே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. கேப்டன் ரஹானேவை அறிமுக வீரர் அஸ்வனி குமார் 11 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அதிரடியாக விளையாடி கொல்கத்தாவுக்கு நம்பிக்கையளித்த ரகுவன்ஷி 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. வெங்கடேஷ் ஐயர் (3 ரன்கள்), ரிங்கு சிங் (17 ரன்கள்), மணீஷ் பாண்டே (19 ரன்கள்), ஆண்ட்ரே ரஸல் (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ரமன்தீப் சிங் 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு போதுமானதாக இல்லை.
 16.2 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய இளம் வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், ஹார்திக் பாண்டியா, விக்னேஷ் புதூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வனி குமார் படைத்துள்ளார்.
 அதையடுத்து, 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை களமிறங்கியது. மும்பை அணி, 12.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அதிகபட்சமாக ரியான் ரிக்கெல்டன் 62 ரன்(41 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்ஸ்), சூர்ய குமார் 27 ரன் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரஸ்சல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் வீண் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:28:52 PM (IST)

மகளிர் உலகக் கோப்பை : ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சச்சின், கோலி வாழ்த்து!
வெள்ளி 31, அக்டோபர் 2025 12:13:32 PM (IST)

நாக்-அவுட் சுற்றில் இமாலய இலக்கை விரட்டி: இந்திய மகளிர் அணி உலக சாதனை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 11:27:56 AM (IST)

கிளட்ச் செஸ் போட்டி: நகமுராவை பழிதீர்த்தார் குகேஷ்
புதன் 29, அக்டோபர் 2025 8:27:40 AM (IST)

ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது: சூர்ய குமார் தகவல்!
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:12:38 PM (IST)

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)




