» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 413 ரன்களை வெற்றிகரமாக விரட்டி கர்நாடகா அணி அபார வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே ஒருநாள் போட்டித் தொடரில் ஜார்க்கண்ட் - கர்நாடகா அணிகள் இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 412 ரன்கள் குவித்தது. கேப்டன் இஷான் கிஷன் 39 பந்துகளில், 14 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் விளாசினார். முன்னதாக அவர், தனது சதத்தை 33 பந்துகளில் விளாசி மிரட்டினார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை இஷான் கிஷன் படைத்தார். இந்த வகை சாதனையில் பிஹார் அணியின் சகிபுல் கானி 32 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். இஷான் கிஷனுக்கு உறுதுணையாக விளையாடிய விராட் சிங் 88, குமார் குஷாக்ரா 63 ரன்கள் சேர்த்தனர்.
413 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கர்நாடக அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் 118 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். அபினவ் மனோகர் 32 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், கேப்டன் மயங்க் அகர்வால் 34 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் சேர்த்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

டி-20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
சனி 20, டிசம்பர் 2025 8:48:37 PM (IST)

திலக் வர்மா, பாண்டியா அதிரடி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
சனி 20, டிசம்பர் 2025 11:35:09 AM (IST)

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

