» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றி: மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!

திங்கள் 28, ஏப்ரல் 2025 12:08:04 PM (IST)



மும்பை ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றியைப் பதிவு செய்த முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றி இதுவாகும்.மேலும் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை சுவைத்த முதல் அணி என்ற பெருமையையும் மும்பை அணி பெற்றுள்ளது. 

அந்த அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றி, 121 தோல்விகளைப் பெற்றுள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 140 வெற்றிகளையும், கொல்கத்தா அணி 134 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 129 வெற்றிகளையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 121 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 117 வெற்றிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 114 வெற்றிகளையும் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory