» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஸ்ரேயாஸ் அதிரடியில் சிஎஸ்கே தோல்வி : பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது!
வியாழன் 1, மே 2025 11:06:05 AM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த சென்னை, முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சென்னை அணி.
ஐபிஎல் டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பீல்டிங் தேர்வு செய்துள்ளது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரஷீத் மற்றும் ஆயுஷ் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
ரஷீத் 11 ரன்களும் ஆயுஷ் 7 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறுது நேரம் தாக்குபிடித்த டெவால்டு ப்ரேவிஸ் 32 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக ஆடிய சாம் கரண் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவர் 4 சிக்ஸர் உள்பட 9 பவுண்டரிகள் உள்பட 88 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பஞ்சாப் அணியின் சஹால் 19வது ஓவரில், 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். கடைசி 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இறுதியில் சென்னை அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சஹால் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 191 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷி 23 ரன்களில் அவுட்டானார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரப்சிம்ரன்சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங்க் 23 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐய்யர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சென்னை அணி, ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1,500 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன்!
சனி 3, மே 2025 4:13:27 PM (IST)

குஜராத் அபார வெற்றி: வெளியேறியது ஹைதராபாத்!!
சனி 3, மே 2025 10:47:47 AM (IST)

தொடர்ச்சியாக 6 வெற்றிகள் : முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை
வெள்ளி 2, மே 2025 12:45:12 PM (IST)

டெல்லி அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா
புதன் 30, ஏப்ரல் 2025 4:56:41 PM (IST)

மிக இளம் வயதில் சதம்: வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:06:34 AM (IST)

ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றி: மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:08:04 PM (IST)
