» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உர்வில், பிரேவிஸ் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது சிஎஸ்கே: தோனி புதிய சாதனை!
வியாழன் 8, மே 2025 12:10:01 PM (IST)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை வெற்றிபெற்றது.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற 57வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே 48 ரன்களும், ரசல் 38 ரன்களும், மணீஷ் பாண்டே 36 ரன்களும் குவித்தனர். சென்னை தரப்பில் நூர் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான ஆயூஷ், கான்வே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த உர்வில் பட்டேல் 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் 8 ரன்னிலும், ஜடேஜா 19 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய பிரேவிஸ், துபே ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பிரேவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவுட் ஆனார். பொறுப்புடன் ஆடிய துபே 40 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது. டோனி 17 ரன்னுடனும், கம்போஜ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிஎஸ்கே ஏற்கெனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் கொல்கத்தா அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவுகள் மற்றும் நிகர ரன் விகிதம் ஆகியவற்றை பொறுத்தே தெரியவரும்.
தோனி புதிய சாதனை
ஐபிஎல் தொடரில் அதிக முறை நாட் அவுட் ஆக இருந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் பல ஆண்டுகளாகவே தோனி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் 100 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவர் 80 முறை நாட் அவுட் ஆக இருந்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
