» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
போர் பதற்றம் எதிரொலி: பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் நிறுத்தம்!
வெள்ளி 9, மே 2025 11:50:20 AM (IST)

போர் பதற்றம் எதிரொலியாக தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி இடையிலான ஐபிஎல் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு அத்துமீறி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. இந்த சூழலில் தரம்சாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டம் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் 8.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா, 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங், 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயர், பேட் செய்ய வந்திருந்த நிலையில் மைதானத்தில் இருந்த மூன்று கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டன.
தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மைதானத்தில் ஆட்டத்தை பார்க்க குவிந்த பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பாகிஸ்தான் எதிரான கோஷத்தை மைதானத்துக்கு வெளியில் பார்வையாளர்கள் எழுப்பினர். இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது என அருண் துமால் உறுதி செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
