» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.முதல் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.
கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்நான்காவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் ஜூன் 01ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது.
மே 23ம் தேதி நடந்த துவக்க விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றிப் பெற்றது. 42-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
60-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் மந்தீப் மோர் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். சுரேஷ் குமார் மற்றும் ராஜீவ் ராத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில்-க்கு வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
