» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
நார்வே செஸ் போட்டியில் 7வது முறை பட்டம் வென்றார் கார்ல்சன்: குகேஷ் 3வது இடம்!
சனி 7, ஜூன் 2025 4:55:48 PM (IST)

நார்வே செஸ் போட்டியில், மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக பட்டம் வென்றார். உலக சாம்பியன் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார்.
நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. இறுதி சுற்று போட்டியில், கார்ல்சனை விட அதிக புள்ளிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க வீரர் கருவானாவை எதிர்த்து குகேஷ் விளையாடினார். சிறு சிறு தவறுகள் காரணமாக, குகேஷ் கருவானாவிடம் வீழ்ந்தார்.
கடந்த சுற்றில் சிறப்பாக விளையாடிய, குகேஷ் கடைசி சுற்றில் தோல்வி அடைந்தார். அதேநேரத்தில், 10வது சுற்றில் கார்ல்சன் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் கார்ல்சன் 7வது முறையாக பட்டம் வென்றுள்ளார். 10 சுற்று போட்டிகளின் முடிவில் 16 புள்ளிகளுடன் கார்ல்சன் முதல் இடம் பிடித்துள்ளார். கருவானா 15.5 புள்ளிகளுடனும் (2வது இடம்), குகேஷ் 14.5 புள்ளிகளுடனும் (3வது இடம்) உள்ளனர்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கார்ல்சன் கூறியதாவது: நான் சிறப்பாக உணர்கிறேன். வெற்றி பெற்றது நிம்மதி அளிக்கிறது. போட்டி முடிவு ரோலர்கோஸ்டர் போன்று இருந்தது. ஆனால் நன்றாக இருந்தது. இந்தியாவின் குகேஷ் மற்றும் எரிகைசி மிகவும் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் இன்னும் தங்களை தயார்படுத்தி கொள்ள சிறிது நேரம் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
6வது சுற்று போட்டியில், தனது தோல்வி உறுதியானது எனத் தெரிந்ததும், ஆக்ரோஷமாக கார்ல்சன் 'டேபிளில்' ஓங்கி குத்தினார். பின் சுதாரித்த கார்ல்சன், குகேஷிடம் கைகொடுத்து விட்டு, வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
