» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியதாக ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் எதிரொலியாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் (27). இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருவதுடன் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் மீது காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியர புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரில் "கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார். போலீசாரும் இவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)

சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
சனி 5, ஜூலை 2025 11:35:26 AM (IST)

269 ரன்கள் விளாசி ஷுப்மன் கில் சாதனை: இந்திய அணி 587 ரன் குவித்து அசத்தல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:05:26 AM (IST)

கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம்: சுப்மன் கில் அசத்தல்!
வியாழன் 3, ஜூலை 2025 10:10:20 AM (IST)

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!
செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)
