» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோவில்பட்டியில் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி தொடக்கம்!
வியாழன் 24, ஜூலை 2025 12:21:34 PM (IST)

கோவில்பட்டியில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது.
துவக்க விழாவில் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் போட்டியான திருப்பூர் - ராணிப்பேட்டை இடையிலான போட்டியை துவக்கி வைத்தார். துவக்க விழாவிற்கு பள்ளியின் செயலாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா தலைமை தாங்கினார்.
இதில் நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், தர்மகர்த்தா மாரியப்பன், நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், சாமி ராஜன், வேல்முருகன், ரவி, வெங்கடேஷ் தலைமையாசிரியர் அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறப்பு விருந்தினர்களை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் குரு சித்திர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டிராஜா, தூத்துக்குடி துறைமுக ஹாக்கி பயிற்சியாளர் ராஜாகுமார் ஆகியோர் வரவேற்று வீரர்களை அறிமுகம் செய்து வைத்தனர். நாடார் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சசிகுமார், கூத்து ராஜன், ராம்குமார், வேல்முருகன், மகேஸ்வரி, உமாதேவி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய ரோஜர் பின்னி: ராஜீவ் சுக்லா பொறுப்பேற்பு!
வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 5:12:23 PM (IST)

மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை.. ஆனால் அக்கறையுடன்.. 3 மாதங்களுக்கு பிறகு ஆர்சிபி பதிவு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:41:31 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு: அஸ்வின் அறிவிப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:39:07 AM (IST)

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வு: முன்னாள் வீரர்கள் வாழ்த்து
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:18:00 PM (IST)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபார வெற்றி: இந்தியாவின் சாதனையை முறியடித்த ஆஸி!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 12:10:45 PM (IST)
