» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசிய கோப்பை டி.20 தொடர்: இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் பயணம்
புதன் 3, செப்டம்பர் 2025 5:37:17 PM (IST)
ஆசிய கோப்பை டி.20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் செல்ல உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் டி.20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குதகுதி பெறும்.லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 10ம் தேதி யுஏஇ, 14ம் தேதி பரம எதிரி பாகிஸ்தான், 19ம் தேதி அணியுடன் மோதும்.
இந்த போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கிறது. இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா 14 மாதங்களுக்கு பின் சர்வதேச டி.20யில் களம் இறங்க உள்ளார். இதனிடையே இந்திய அணி நாளை மும்பையில் இருந்து துபாய் செல்ல உள்ளது. இதனிடையே குடல் தசை பிடிப்பிற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 சதவீதம் உடற்தகுதியுடன் களம் இறங்க தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




