» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் நிகாத் ஜரீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்!!
புதன் 10, செப்டம்பர் 2025 11:41:08 AM (IST)

உலக குத்துச்சண்டை போட்டி பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகாத் ஜரீன், கால்இறுதிக்கு முன்னேறினார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன், ஜப்பானின் யுனா நிஷினகாவை எதிர்கொண்டார். இருவரும் ஆவேசமாக மோதிக் கொண்ட போதிலும் முதல் ரவுண்டில் நிஷினகாவின் கையே சற்று ஓங்கியது.
அடுத்த ரவுண்டில் நிகாத் ஜரீன் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு அதை புள்ளியாக மாற்றினார். கடைசி ரவுண்டில் ஜரீனின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் விதமாக நிஷினகா அடிக்கடி அவரை கட்டிப்பிடித்ததால் போட்டி நடுவரின் எச்சரிக்கைக்குள்ளானதுடன், ஒரு புள்ளியை அபராதமாக இழந்தார். இது ஜரீனுக்கு சாதகமாக அமைந்தது. முடிவில் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் மீனாக்ஷி (48 கிலோ) 5-0 என்ற கணக்கில் சீனாவின் வாங் கிபிங்கை வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். முன்னதாக இந்தியாவின் லக்ஷயா சாஹர் (80 கிலோ), சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), நரேந்தர் பெர்வால் (90 கிலோவுக்கு மேல்) ஆகிய வீரர்கள் தோற்று வெளியேறினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 4-வது டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி!
வியாழன் 6, நவம்பர் 2025 5:46:10 PM (IST)

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஜிதேஷ் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிப்பு
புதன் 5, நவம்பர் 2025 5:30:26 PM (IST)

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:48:01 PM (IST)

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:44:46 PM (IST)

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
திங்கள் 3, நவம்பர் 2025 8:50:21 AM (IST)

வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங் அசத்தல்: 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
திங்கள் 3, நவம்பர் 2025 8:47:06 AM (IST)




