» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
வியாழன் 25, செப்டம்பர் 2025 4:17:00 PM (IST)
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் அகர்கர் அறிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 2-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்டது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் அகர்கர் இன்று துபாயில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையிலான அணியில் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஞாயிறு 4, ஜனவரி 2026 12:03:19 PM (IST)

வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்க கேகேஆர் அணிக்கு பிசிசிஐ அதிரடி உத்தரவு!
சனி 3, ஜனவரி 2026 5:42:48 PM (IST)

ஆஸி. மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் வெற்றி!
சனி 27, டிசம்பர் 2025 3:51:10 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர் : நியூசிலாந்து அணி அறிவிப்பு!
வியாழன் 25, டிசம்பர் 2025 4:53:14 PM (IST)

விஜய் ஹசாரே கிரிக்கெட் : கிஷன் சாதனையை மிஞ்சிய படிக்கல் - அபார சதத்துடன் வெற்றி!!
வியாழன் 25, டிசம்பர் 2025 11:36:16 AM (IST)

யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் சாம்பியன்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:14:48 AM (IST)

