» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸி சென்றடைந்த இந்திய டி20 அணி வீரர்கள்!

வெள்ளி 24, அக்டோபர் 2025 3:30:19 PM (IST)

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. 

ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், அக்.29ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா , ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.

டி20 தொடர் அட்டவணை

அக்.29ம் தேதி முதல் டி20 போட்டி 

அக். 31ம் தேதி  2வது டி20 போட்டி 

நவ.2ம் தேதி 3வது டி20 போட்டி 

நவ.6ம் தேதி 4வது டி20 போட்டி 

நவ.8ம் தேதி 5வது டி20 போட்டி 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory