» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
திங்கள் 27, அக்டோபர் 2025 4:16:16 PM (IST)

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான கேப்டன் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. கடந்த ஜூன் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 4 டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை 1-1 என அந்த அணி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி கொல்கத்தாவிலும், 2-வது போட்டி குவாஹாத்தியில் நவம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி சோர்ஸி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்க்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரேன்.
கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள பவுமா அணிக்கு திரும்பி உள்ளார். கடைசியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: சன்ரைசர்ஸ் 3வது முறையாக சாம்பியன்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:25:18 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் வெற்றி: இந்திய அணி சாதனை!
சனி 24, ஜனவரி 2026 11:58:43 AM (IST)

டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர்: வங்கதேசம் விலகல்
வியாழன் 22, ஜனவரி 2026 9:29:07 PM (IST)

அபிஷேக் சர்மா அதிரடி : 44-வது முறையாக 200+ ரன்கள் குவித்து இந்தியா வெற்றி!
வியாழன் 22, ஜனவரி 2026 10:27:37 AM (IST)

