» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அறிவிப்பு
சனி 2, மே 2026 5:47:25 PM (IST)
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியினை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட வலுவான அணியை ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்கி வழிநடத்துகிறார். இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த முறை அணியில் சில புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதி புல்மாலி மற்றும் நந்தினி சர்மா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். காயம் காரணமாக காஷ்வீ கௌதம் மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
அணிப் பட்டியல்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்)
ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்)
ஷபாலி வர்மா
ஜெமிமா ரோட்ரிக்ஸ்
பாரதி புல்மாலி
தீப்தி சர்மா
ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்)
யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்)
ஸ்ரீ சரணி
நந்தினி சர்மா
ரேணுகா சிங் தாக்கூர்
அருந்ததி ரெட்டி
கிராந்தி கவுட்
ஸ்ரேயங்கா பாட்டீல்
ராதா யாதவ்
இந்திய அணியின் அட்டவணை (குரூப் ஸ்டேஜ்):
ஜூன் 14 பாகிஸ்தான் எட்ஜ்பாஸ்டன்
ஜூன் 17 நெதர்லாந்து ஹெட்டிங்லி
ஜூன் 21 தென்னாப்பிரிக்கா ஓல்ட் டிராஃபோர்டு
ஜூன் 25 வங்கதேசம் ஓல்ட் டிராஃபோர்டு
ஜூன் 28 ஆஸ்திரேலியா லார்ட்ஸ் மைதானம்
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்துடன், இந்திய மகளிர் அணி இந்த ஆண்டு தனது முதல் டி20 உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த கேப் வெர்டே!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:44:52 PM (IST)

கிரிக்கெட் மைதானத்தில் கைகலப்பு: இலங்கை வீரர்களுடன் மல்லுக்கட்டிய இளம் வீரர் சூர்யவன்ஷி!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:44:13 AM (IST)


